Wednesday, September 18, 2019

மயிலாப்பூர் வீதிகளில் மினிமலிச பொம்மைகள்


        கொலு பொம்மைகளின் வரவால் மயிலாப்பூர் பகுதி, மக்களால் நிரம்பி வருகின்றது. பலத்தரப்பட்ட மக்களும் இப்பகுதிக்கு வந்து இருபது முதல் முப்பது பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.
         கோயில்கள் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது கற்சிலைகளும் வடிவங்களும் தான். அந்த சிலைகளை பார்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் கோயில்களுக்கு வருவதுண்டு. அதுமட்டுமின்றி அந்த சிலைகளை முதன்மையாக வைத்து ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. பல சிலைகளுக்கு நீண்ட நெடிய வரலாறுகளும் உண்டு. அப்படிப்பட்ட சிலைகள் காலத்திற்கேற்ப மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல மாற்றங்களை கண்டு வருகின்றது, இது அனைத்திற்கும் பொறுந்தக் கூடிய ஒரு வாக்கியமே. ஆனால், சிலைகளின் மாற்றம் என்பது மிகவும் சுவாரசியமானது. அவை கற்களில் தொடங்கி களிமண் மற்றும் அது போன்ற பொருட்களில் மாற்றம் பெற்று தற்போது பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் ஆகிய பொருட்களில் செய்யும் அள்வுக்கு மாற்றம் பெற்றுள்ளது. அவை அளவுகளிலும் மாற்றம் பெற்றுள்ளன, பெரிய அளவு சிலைகளில் தொடங்கி கையில் அடங்கக் கூடிய அளவிற்கு கொண்டுவரப் பட்டுள்ளன. இம்மாதிரியான சிலைகள் குழந்தைகளுக்கு மிகவும் படித்தமானதாக இருப்பது மட்டுமின்றி அவைற்றை வாங்கி வீட்டில் அழகு பொருட்களாகவும் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.



       மினிமலிச சிலைகள் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறி வருகின்றது. இச்சிலைகள் பெரும்பாலும் வீடுகளில் புரட்டாசி மாதங்களில் கொலு என்ற நிகழ்ச்சியாக ஏழு முதல் எட்டு நாட்கள் வரை வைத்து அழகு பார்க்கப் படுகின்றது. அந்த ஏழு நாட்களில் மட்டும் வீடிகள் அனைத்தும் திருவிழா கோலமாக காட்சி அழித்து பாட்டு கச்சேரி என மிகவும் ஆரவாரம் கொண்டதாக இருக்கும் . அந்த நாட்களில் அவ்வீட்டு குழந்தைகளுக்கு தனி உற்சாகமும் ஒட்டிக் கொள்கிறது,
       சென்னையில் கொலு பொம்மைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற  இடமாக இருப்பது மயிலாப்பூர். அவ்விடம் கொயில்கள் சூழ, தெப்பக்குளத்தின் அழகோடு மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கக் கூடியது. புரட்டாசி மாதம் நெருங்க நெருங்க மயிலாப்பூர் பகுதி தெருக்களில் குட்டி குட்டி கொலு சிலைகளும் பல்வேறு வடிவங்களில் உருவம் கொண்டு இருக்கும். சென்னையின் பல இடங்களில் இருந்து பலதரப்பட்ட மக்கள் இப்பகுதிக்கு வியபாரம் செய்ய வருகின்றனர்.

       அச்சாலையில் வியாபரம் செய்து கொண்டிருந்த ஒருவரிடம் பேசிய பொழுது அவர் போருரிலிருந்து வருவதாகவும், அங்கு ஒரு கடை வைத்து நடத்தி கொண்டிருப்பதாகவும் கூறினார். கொலு சிலைகளை பற்றி மேலும் விசாரித்த பொழுது, ஐந்து வருடங்களாக இச்சிலகளை வியாபாரம செய்து வருவதாகவும் இங்கு வரும் நேரங்களில தன் மனைவி அக்கடையை பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். இச்சிலைகள் அனைத்தையும் சென்னையின் சுற்றியுள்ள பகுதிகளில் செய்வதாக கூறினார். மேலும், சிலைகளி குறைந்தபட்ச விலை 150 எனவும் அதிகபட்சம் பத்தாயிரம் வரை இருப்பதாக கூறினார்.
         இதுபோல பல வியாபரிகளிடம் பேசிய பொழுது தினமும் குறைந்தபட்சம் ஏழாயிரம் வரை லாபம் பெற முடியும் சில நாட்களில் அதற்கு அதிகமாகவும் கிடைக்கும் என கூறுகின்றனர். இந்த வருடத்தின் தனி சிறப்பாக அவர்கள் கூறுவது பல கைவினை சிலைகள் வந்துள்ளதாகவும், அவை சிறிது விலை அதிகமாக இருந்தாலும், தனிசிறப்பாக இருப்பதாக குறுகின்றனர்.

         குழந்தைகளை கவரும் விதமாக பல்வேறு நிறங்களில் வடிவமைக்கப்பட்ட இப்பொம்மைகள் இவ்விடத்திலிருந்தே மற்ற மால்களுக்கும் கடைகளுக்கும் செல்கின்றனர்.  

No comments:

Post a Comment