Wednesday, September 18, 2019

அண்ணா சாலையில் எல்.ஐ.சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகுந்த லாபத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் எல்.ஐ.சி. இதில் பணியாற்றும் வாய்ப்பை இளைஞர்கள் மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். அதில் சுமார் 8000 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது.
வடக்கு மண்டலம், வடக்கு மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், கிழக்கு மத்திய மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், தெற்கு மத்திய மண்டலம், மேற்கு மண்டலம் என மொத்தம் 8 மண்டலங்கள் வாரியாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:
எல்.ஐ.சி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவை அனைத்திலும் தேர்ச்சிப் பெற்ற விண்ணப்பதார்கள், தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்கள்,தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள்
இதில் பணியாற்ற முடியும்.

ஆனால் இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் அந்தந்த மாநிலத்தில் தங்களுடைய தாய் மொழிகளில் படித்த கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு மறுப்பதாக கூறப்படுகிறது.

அலுவலகத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தும் நலசங்க ஊழியர்கள்


ஆகவே அவர்களது தாய்மொழியில் தேர்வு எழுத அறிவிக்க வேண்டும் என்றும் தென்மண்டலத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு எல்.ஐ.சி நலச்சங்கம் சார்பில் இன்று அலுவலகத்தின் வெளியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஊழியர்கள் ஆவேசமாக பேசினார், பின்னர் ஹிந்தி மொழியை தமிழ் நாட்டில் திணிப்பதை வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தேர்வு எழுத அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.



 மேலும் இதுகுறித்து மண்டல மேலாளரிடம் மனு அளிக்கப் போவதாகவும் அவர்கள் கூறினர்.

                                 - மனிஷா சூரியமூர்த்தி
                                            18/09/2019

No comments:

Post a Comment