Tuesday, September 24, 2019

ஒரு குட்டி தீவாக இயங்கி வரும் மாடு தொட்டி


சென்னையின் முக்கிய இடமான வியாசர்பாடியில் ஒரு தீவை போல் செயல் பட்டு வரும் மாடு தொட்டி எனும் இறைச்சி விற்பனை இடம்
       சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ளது மாடு தொட்டி என்ற பகுதி. அந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் இந்தியாவின் வடக்கு பகுதியிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாடு மற்றும் ஆடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளே சென்றால் சென்னை என்ற உணர்வே இல்லாமல், தனியாக ஒரு தீவாக காட்சி அளிக்கிறது மாடு தொட்டி என்ற அப்பகுதி.


        பல்வேறு வகையான ஆடுகள் மற்றும் மாடுகள் அவ்வித்திறக்கு கொண்டுவரப்பட்டு, அவற்றின் மேலே முத்திரையிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப் படுகின்றது. அதுமட்டுமன்றி சென்னையின் அனைத்து பெரிய உணவகங்களுக்கு மொத்தமாக இறக்குமதி செய்யபடுகின்றது. அங்கு வேலை செய்யும் அப்துல் என்பவரிடம் பேசிய பொழுது, அங்கு கொண்டுவரப்படும் மாடுகளின் தோல் மற்றும் வால் பகுதியானது ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அனுப்ப படுவதாக கூறினார்.
        அதுபோல, மாட்டின் பற்கள், எலும்புகள், மற்றும்ம் இதர பயன்படும்படியாக உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்  படுவதாக கூறினார். இந்த பகுதியானது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து செயல்பட்டு வந்ததாகவும், ஆங்கிலேயர்களுக்கு மாடு மட்டும் ஆடு இறைச்சி உணவுகளுக்காக செயல் பட்டு வந்ததாக கூறினார். மேலும், அப்பகுதி அவர்களின் இறைச்சி பயன்பாட்டிற்கு மட்டுமே செயல்பட்டதாகவும் கூறினார்.

         சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அதிகபட்சமாக ஐமப்து லட்சம் வரை வியாபாரம் நடக்கும் என தெரிவித்தார். அப்பகுதியில் வேலை செய்பவர்கள் பெரும்பாலானோர் அங்கு வசிக்கும் மக்களும் இளைஞர்களுமே. அப்பகுதிக்குள் உள்ளெ சென்று பார்த்த பொழுது சவக் கிடங்கு போல் காட்சியளித்து, ரத்த கவிச்சை நெடியோடு காட்சியளித்தது.
          இப்படிப் பட்ட பகுதி ஒன்று இருப்பது சென்னையின் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சென்னையில் முக்கிய இடத்தில் ஒரு தீவை போல் செயல் பட்டு வருகின்றது.



No comments:

Post a Comment