Wednesday, September 18, 2019

இரு வழி சாலையாக மாற்றப்பட்ட சென்னை அண்ணா சாலை


பல வருடங்களாக ஒரு வழி பாதையாக இருந்து வந்த சென்னை அண்ணா சாலை இரு வழி பாதையாக மாற்றப்பட்டது.
    சென்னை சிம்சன் பகுதியிலிருந்து ஆயிரம் விளக்கு பகுதி வரை நீளும் ஒரு வழி பாதையானது தற்போது மாற்றப்பட்டு பல போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வழி பாதையாக இருந்த ஜி.பி.பேட்டரஸ் சாலையில் பொக்குவரத்து மாற்றப்பட்டு, அண்ணா சாலையிலிருந்து செல்லும் வாகனங்கள் ஜி.பி.சாலையில் அனுமதுக்கப் படாது என கூறியுள்ளனர். அதே நேரத்தில் டவர் க்லாக் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.சாலைக்குள் அனுமதிக்கும் படியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

     வொய்ட்ஸ் ரோட் சாலையிலும் இரு வழி போக்குவரத்து அனுமதிக்கப் பட்டுள்ளது. பல மாதங்களாக நடைப்பெற்று வந்த மெட்ரோ இரயில் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளதால் இப்பணிகள் மிக தீவரமாக நடைப்பெற்று வருவதாக பொதுமக்கள் கூறினர்.
        அண்ணா சாலையில் 2011ஆம் ஆண்டானது பாதாள நடைபாதை அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யப்படட்து. பின்பு 2013 ஆம் ஆண்டு பாதாள நடைபாதை அமைப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பிறகு மீண்டும் 2018ஆம் ஆண்டு மெட்ரோ இரயில் சோதனை நடைப்பெற்றது. இப்படி அண்ணா சாலையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுவும் அண்ணா சாலை சென்னையின் பிரதான போக்குவரத்து பகுதியாக இருப்பதனால் சிறு தவறும் பெரும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
       தற்போது சென்னை மாநகராட்சியானது இந்த இருவழி மாற்றத்தை ஒருபரிசோதனை முயற்சியாக செய்ய திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியுள்ளதாக கூறினார் காவல் அதிகாரி ஒருவர்.


No comments:

Post a Comment