மனிதன் சக மனிதனையே நேசிக்க நேரமில்லாத இவ்வுலகத்தில் தான், பறவைகளையும்
சக உயிராக நேசிக்க கூடிய மனிதர்களும் உள்ளனர்.
அப்படி பறவைகளை நேசிப்பதும்
நம் மனிதர்களுடைய கடமை என வாழ்ந்து கொண்டிருப்பவர்
தான் கேமரா ஹவுஸ் சேகர். முப்பது வருடங்களுக்கு முன்பாக கையில் வெறும் ஒரு சட்டையுடன்
தருமபுரி மாவட்டத்திலிருந்து சென்னை கிளம்பி வந்தவர். கேமரா பழுது பார்ப்பதை தன் தொழிலாக
ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகின்றார். பறவைகளுக்கு உணவு அளிப்பதை அன்று தொடங்கி இன்று
வரை சலிப்படையாமல் செய்வது என்பது மிகவும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விசயம். ஆனால், இந்த
பறவைகளின் வருகை அதிகரித்திருப்பது 2004 சுனாமிக்கு பிறகு தான் என்கிறார். அந்த கிளிகள்
அனைத்தும் அவர் வீடு அமைந்துள்ள இடத்திருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்து வருவதாக
கூறுகிறார்.
இப்படி ஒரு கூட்ட
நெரிசலான, சப்தம் அதிகமுள்ள இடத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வருவது எவ்வாறு சாத்தியம்
என கேட்டதற்கு “ இவை வெறும் உணவுக்காக வருவதாக இருந்தாலும் கடவுளின் அருளாகவே இதனை
கருதுகிறேன்” என்கிறார். தினமும் இரண்டாயிரத்துக்கும் மெற்பட்ட பறவைகள் வருகை தருவதால்
அதற்கு தகுந்த உணவுகளை தயார் செய்வது என்பது மிகவும் கடினமாக பணியாக கருதாமல் மிகவும்
மகிழ்ச்சியுடன் செய்வது என்பது, அன்பு எதையும் செய்ய வைக்கும் என்பதற்கு சிறந்த சான்று.
தனக்கு கிடைக்க கூடிய சொற்ப வருமாத்தில் பாதியை
பறைவகளுக்காக மட்டுமே செலவு செயவது அவ்வளவு எளிதானது அல்ல. “ கடந்த பதினஞ்சு வருசமா
ஒரு நாளு கூட அவுங்கள காக்க வெச்சதில்ல” என மிகவும் பாசத்தோடு பறவைகளை கூறுகிறார்.
கிளி மாதிரியான
பறவைகளை கிராமங்களில் பார்ப்பதே அரிதாகி விட்ட இக்காலத்தில் சென்னை மாதிரியான பெரு
நகரங்களில் இவ்வளவு அடர்த்தியாக ஒரு இடத்தில் வந்து சேர்வதை அரசு பாதுகாக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பது இவரின் கோரிக்கையாக உள்ளது. பறவை வரும் நேரங்களில் மட்டும்
அவ்விடத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு “NO HORN” பகுதியாக மாற்ற
வேண்டும் என் கூறுகிறார். பல நாடுகள் மற்றும் BBC போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள்,
இயற்கை சார்ந்த ஆய்வாளர்கள் பலர் வருகை தரும் இவ்வேளையில் அரசு இதனை சிறிதும் பொருட்படுத்தாமல்
இருப்பது வருத்தமளிப்பதாக கூறுகிறார் .
“ நாம சாகரப்போ
எதையும் கையில எடுத்துட்டு போக போரதில்ல, அப்பறம் எதுக்கு இவ்வளவு ஆரவாரம், முடுஞ்ச
அளவுக்கு இல்லாதவங்களுக்கு கொடுக்கரன் அவ்வளவுதான்” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
கிளிகள் முட்டுமின்றி புராக்களும் இவரது உணவுக்கு எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றன்.
அவரிடம் புறாக்களும் கிளிகளும் உணவுக்காக சண்டையிட்டு கொள்ளாதா என்று கேட்டதற்க்கு
“ அவுங்க நம்மள போல இல்ல பா, வயித்துக்கு தேவையான உணவ எடுத்துக்கிட்டு அமைதியா பொயிருவாங்க”
என சிரித்து கொண்டே கூறினார்.
தனக்கு தேவையானது
பணமோ பாராட்டோ அல்ல, பறவைகளுக்கு ஒரு வேளை அரிசியும், முடிந்தால் தனக்கு சிறிது உதவி
மட்டுமே என ஆளமாக கூறுகிறார். அன்பு தான வாழ்க்க என கூறிவிட்டு
எவ்வித சலனமும் இன்றி அமைதியாக தன் வேலைகளுக்கு செல்ல பறைவைகளினூடாக தானும் ஒரு பறவையாக சென்று மறைந்தார்.
No comments:
Post a Comment