Thursday, December 7, 2017

சிறு துளியில் பெரு வெள்ளமாய் இராயப்பேட்டை


    சென்னையின் பழமையான பகுதிகளில் முக்கியமான பகுதி, மைய்யபகுதி இந்த இராயப்பேட்டை. இப்பகுதியின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தோற்றத்தினை கொண்டிருக்கும். ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னையில் துண்டு பிரசுரம் முதல் பேனர் கலாச்சாரம் வரை அச்சடிப்பது என்றால் பெயர் சொல்லகூடிய இடங்களில் முக்கிய இடம் இராயப்பேட்டை என்றாலும், அனைத்து வகையான பிரியாணிகளுக்கும், அசைவ உணவிற்கும் இராயப்பேட்டை சிறந்த இடமாகும் ஆகும். அத்தகைய இராயப்பேட்டைக்கு மற்றொரு சிறப்பும் உண்டென்றால் 20வதுக்கு 20 இடத்தில் 20 வீடுகள் இருப்பதுதான். அருகருகில் தொடர்ந்து பல வீடுகளை ஐஸ்ஹவுஸ்(Ice House) பகுதியிலிருந்து பார்க்க முடியும். பெரும்பாலும் இப்பகுதியில் இஸ்லாமிய சமூகத்தினரே இருக்கின்றனர். அதனால் இஸ்லாமிய விஷேஷங்களும் வெகு விமர்சையாக இருக்கும். அந்த மாடிவீடுகள் எல்லாவற்றிலும் தவறாமல் மோட்டார்களும் இருக்கும் அதனை தொடர்ந்து காலையும் மாலையும் இயக்கவும் செய்வார்கள், ஆனால் தண்ணி தான் வரவே வராது. மோட்டரை நம்பாத சிலர் அடிகுழாவை நாடுகின்றனர்.

மாடிவீட்டுகாரர்களுக்கு மட்டும் போனஸ்? 
மற்ற காலங்களில் தண்ணீர் என்பது ஏக்கத்தினை உண்டாக்கும் இப்பகுதியில் மழை வரும்போது மட்டும் இடுப்பளவு  தண்ணீர் நிரம்ப தவறுவதில்லை. அந்த இடுப்பளவு தண்ணீரில் தான் சாக்கடையும் ஓடும் முடிந்தளவு முக்கிக்கொண்டு சில வண்டிகளும் ஓட முயற்ச்சிக்கும். மழை தண்ணிரா? இல்லை சாக்கடை தண்ணிரா?? என்று யூகிக்க முடியாத இந்த நீரானது பிரதான சாலை மட்டுமின்றி சுற்றியுள்ள அக்கம்பக்க வீடுகளையும் விட்டுவைக்காமல் உள்ளே புகுந்து ஒரு அலசு அலசி வீட்டினுள் இருக்கும் குப்பைகள் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் வரை அனைத்தையும் வெளியே சாலைவரை கொண்டுவருகிறது. மாடிவீடுகளில் இருப்பவர்கள் இந்த ஒரு அவதியிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

தண்ணீர் தேங்க காரணம்?
சென்னையின் வெளிப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கும், வீடுகளில் தண்ணீர் வருவதற்கும் காரணம் ஏறிகள் இருந்த இடம். மற்ற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு, மண் சார்ந்த பகுதிகள் இல்லாமல் இருப்பதும் வீடுகளின் எண்ணிகை அதிகரித்து இருப்பதும் ஒரு முக்கிய காரணாமாக உள்ளது. கான்கிரிட் சாலை, சிமெண்ட் சாலை போன்று போன்றவை மட்டுமே நிறைந்து காணப்படுவதும், செடி, கொடி, மரங்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். பின்பு நீர் உறிஞ்சவும், நிலத்தடி நீர் தேக்கவும் வாய்ப்பில்லாமல் போய்டுவிடுகிறது. சாலையின் இரு புறங்களிலும் உள்ள வடிகால் சாக்கடைகளை தூர்வாரி சீரமைத்தாலே போதியளவு தண்ணீர் தேங்கும் பிரச்சனை தீரும்.  

அரசின் தீர்வு?  மக்களின் தீர்வு?
     ஒவ்வொரு முறை தண்ணீர் தேங்கும் போதும் அதனை அரசு அகற்றிவிடுகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன வழி என்பதனை அறிந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அங்குள்ள மக்களும் மழை வந்தால் தண்ணீர் தேங்கும், வீட்டினுள் வரும் என்ற மனநிலைமைக்கு வந்து விட்டனர். இந்த நிலை மாறி அரசினை நம்பாமல் தானாக முன்வந்து போதுமான வடிகால் சாக்கடைகளை தூர்வாரி பனிகளை மேற்கொண்டால் இந்த துயரங்களிலிருந்து விடுபட வாய்புள்ளது.
சாக்கடைகளிலிருந்து வரும் தூர்நாற்றத்தின் மூலமே பலவிதமான நோய்களுக்கு நுழைவாயிலாக உள்ளது. தண்ணீர் தேக்கத்தினையும், சாக்கடை கழிவுகளையும் இயற்கை என்று மக்கள் அதனை விடுபட நினைத்தால் மக்கள் வாழ தகுதியான இடமாக இருக்கும்.



-    ஜீவா முருகன்








அரைசதம் கடந்த சரளா சந்திரா - FORUM ART GALLERY





7/12/2017, வியாழன்
அடையார், சென்னை.


      வரை கலையில் புது விதமாக மின்னும் பிளாஸ்டிக் காகிதத்தை கொண்டு வரையப்பட்ட மூன்று நாள் ஓவிய கண்காட்சி அடையாரில் அரங்கேறியது. அங்குள்ள ஓவியங்கள் பலவை கடவுள் சார்ந்த படைப்பாகவே இருந்தது. அதிலும் தேவையற்று தூக்கியெறியப்படும் காகிதங்களை கொண்டு ஓவியங்களை படைத்த சரளா சந்திரா (60) அவர்களுக்கு இந்த கண்காட்சி மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது.
    
     வட நாட்டினை சேர்ந்தவரான இவருக்கு இது இந்தியாவில் 50வது ஓவிய கண்காட்சி ஆகும். மேலும் வேதியல் முறை மூலம் ஏற்படும் வண்ணங்களை பற்றி முதுகலை பட்டமும் பயின்றவர்.

தங்கம் மற்றும் வெள்ளிநிற Foil பேப்பர்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தது. இவற்றில் சில வேதியல் மாற்றம் கொண்டும் செயல் படுத்தியும் வைத்திருந்தது. மரத்தினால் ஆனா உருவ சிலைகளுடன் சில முக்கிய கலைபொருள்களும் முக்கியமானதாக இருந்தது. இந்த மூன்று நாள் கண்காட்சியில் இன்று பெரியவர்களின் ஓவியங்களும் நாளை சிறுவர்களின் ஓவிய கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

கலைகளை வெளிக்கொண்டுவரும் முனைப்போடு செயல்படும்இந்த Forum art gallery யானது பல விதமான வரை கலை மற்றும் கைவினை பொருள்களை ஆதரிக்கும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருகிறது.

- ஜீவா முருகன்

Tuesday, October 10, 2017

அழிவின் விளிம்பில் பட்டினப்பாக்கம் – கடலரிப்பு மட்டும் காரணமா?

பட்டினபாக்கம், சென்னை






கடலரிப்பு என்பது கடலுக்கு நீர்வரத்து அதிகமாதலால் அலைகள் மூலம் அதிகப்படியான மண் அரிப்பு ஏற்படுவதாகும். கடலின் அலைகளானது ஒரு வினாடிக்கு 23 முறை வந்து செல்லுமாம், இவற்றின் ஏற்ற குறையே இதன் வெளிப்பாடக உள்ளது. கடலரிப்பு உருவாவதற்கு 
மூன்று முக்கிய காரணமாக கூறப்படுவதில் ஒன்று பருவ நிலை மாற்றமும், உலக வெப்பமயமாதலின் மூலம் பனி மலைகளில் அதிக்கபடியான பனிக்கட்டி

உருகுதலின் காரணமாக கடலின் நீர் அளவும் விரிகிறது, இரண்டாவது முக்கிய காரணமாக கூறப்படுவது இயற்கைக்கு கேடாக அமைந்திருக்கும் அணு உலைகளும் ஒரு முக்கிய பேரிடராக உள்ளது. மூன்றாவது முக்கிய காரணம் கடலில் கலக்கும் ஆறுகளின் நீர் வரத்தும் சீரற்று இருப்பதால் கடலின் தன்மை மாறுபட்டு காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையின் காரணமாக கடலில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவதும் ஒரு எச்சரிக்கை பிம்பமாக உள்ளது,. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள குடியிருப்பு வெகுவாக பாதிக்கப்படுகின்றன. சென்னை, எண்ணூர் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்ட இடங்களாகும்.  கடல் அரிப்பின் காரணமாக ஒரு வருடத்திற்கு பட்டினப்பாக்கத்தில் மட்டும் சுமார் 20 முதல் 30 வீடுகள் அடித்து செல்லப்படுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இல்லாமல் சில நாட்கள் உறவினர் வீட்டிலும், சில நாள் கடலோரத்திலும் தாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் மாணவர்கள் மற்றும் குழைந்தைகளின் நிலைமை கேள்விக்குறியாக தான் இன்றளவும் உள்ளது. அரசாங்கம் இதற்கு எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்து தராததும், பல முறை முற்றுகையிட்டும் செவி சாய்க்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் உருக்கத்துடன் கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள கடலோர கிராமங்களில் வீடுகள் இதன் காரணமாகவே கடலை விட்டு தூரத்தில் கட்டப்படுவதாகவும், ஆனால் சென்னையில் போன்ற பெருநகரங்களில் குடியிருப்பு அதிகமாக இருத்தலின் காரணமாக இவ்வித சேதாரங்கள் அதிகளவில் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான இயற்கை முரண்பாடு செயல்கள் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒரு படியாக உள்ளது. அதிலும் வரலாறு சிறப்புமிக்க இடங்களில் பட்டினப்பாக்கம் போன்ற இடங்கள் அழிவு நிலையை நோக்கி செல்வது மிகுந்த இயற்கை அழிவுகளின் ஒரு பகுதியாகும். பட்டினபாக்கத்திர்க்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணி, ராயபேட்டை, கலங்கரை பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதும் பெரு நகரங்கள் அழிவின் மறு புறமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடருமானால் சென்னை போன்ற பெருநகரங்கள் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிடுமோ? என்ற நிலை உருவாகின்றது.

- ஜீவா முருகன்