Showing posts with label சுற்றுப்புறம். Show all posts
Showing posts with label சுற்றுப்புறம். Show all posts

Thursday, December 7, 2017

சாயம் வெளுக்கும் அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் வண்ணங்கள்


சென்னை.



CSR எனப்படும் Corporate Social Responsibility என்ற கருத்தியலை கொண்டு அரசு பள்ளிகளுக்கு பலவிதங்களில் மேம்பட உதவிவருகிறது சென்னையின் UNITED WAY.
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை சமூகத்திர்ற்கு கொண்டு சேர்ப்பதே இதன் முதற் கொள்கையாக கொண்டு இயங்கிவருகிறது. இதன் அடிப்படையில் கார்பரேட் நிறுவனங்களிடம் தகுந்த உதவியினை பெற்று அதனை அரசு பள்ளிகள், நியாய விலை கடைகள் போன்று கேப்பாறற்று கிடக்கும் கட்டிடங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் புதுபிப்பதே தலையால கடமையாக செய்துவருகிறது UNITED LIVE. இவர்களால் அரசு கண்டுகொள்ளாத பல  அரசு பள்ளியும் தனியார் பள்ளியும் வித்தியாசம் தெரியாமல் மாறிவிட்டது.

ஐடி(IT) நிறுவனங்களில் வேலைசெய்வோரும், கல்லூரி மாணவர்களும் இந்த சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விடுமுறை நாளான சனிகிழமை அன்று மட்டும் உறுப்பினர் அனைவரும் ஒன்றினைகின்றனர்.
ஒரு பழைய அங்கண் வாடி பள்ளி ஒன்றில் பாழடைந்த சுவரும், சுகாதாரமற்றும் இருந்ததால் அதனை சுத்தம் செய்து வண்ணம் தீட்டியதன் மூலம் அப்பள்ளிக்கு மாணவர்களின் வரத்து அதிகரித்ததால் அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

அனைவருக்கும் கல்வி என்பது அரசின் சொல்லாக இருந்தாலும் அதனை நிறைவேற்றுவதில் மும்முரமாக உள்ளது இந்த அமைப்பு. கட்டிடங்களை மட்டும் கட்டும் இந்த அரசு தரப்பானது அதனை பராமரிக்காமல் விடுவதனால் மக்கள் தனியார் மயத்தை நாடி செல்லவேண்டிய நிலை உண்டாகிறது. இந்த நிலைமாறவே LIVE UNITED தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளிக்கின்றனர்.
முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நிப்பான் பெயின்ட் நிறுவனம் பள்ளிகளுக்கான வண்ணங்களை கொடுத்து உதவி வருகிறது. அண்ணா பல்கலைகழக மாணவர்கள் பெருமளவில் இதில் இடுபட்டு வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் அவர்களால் முடிந்தளவு உதவிகளும் பள்ளி மாணவர்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.
UNITED WAY யின் அடுத்த கட்டமாக சென்னையிலும் சென்னைக்கு அருகிலும் உள்ள குறைந்தது 30 பள்ளிகளுக்கு ஒரே நாளில் வண்ணம் தீட்டுதல் நிகழ்த்துவதாக முடிவுசெய்துள்ளனர். Paint மற்றும் Marathon இரண்டும் இனைந்து PAINTRATHON என்று இதற்கு பெயரிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நிற மாற்றம் கொண்டுவருவதே லட்சியமாக கொண்டு செயல்பட்டுவருகிறது இந்த UNITED WAY.

Tuesday, October 10, 2017

அழிவின் விளிம்பில் பட்டினப்பாக்கம் – கடலரிப்பு மட்டும் காரணமா?

பட்டினபாக்கம், சென்னை






கடலரிப்பு என்பது கடலுக்கு நீர்வரத்து அதிகமாதலால் அலைகள் மூலம் அதிகப்படியான மண் அரிப்பு ஏற்படுவதாகும். கடலின் அலைகளானது ஒரு வினாடிக்கு 23 முறை வந்து செல்லுமாம், இவற்றின் ஏற்ற குறையே இதன் வெளிப்பாடக உள்ளது. கடலரிப்பு உருவாவதற்கு 
மூன்று முக்கிய காரணமாக கூறப்படுவதில் ஒன்று பருவ நிலை மாற்றமும், உலக வெப்பமயமாதலின் மூலம் பனி மலைகளில் அதிக்கபடியான பனிக்கட்டி

உருகுதலின் காரணமாக கடலின் நீர் அளவும் விரிகிறது, இரண்டாவது முக்கிய காரணமாக கூறப்படுவது இயற்கைக்கு கேடாக அமைந்திருக்கும் அணு உலைகளும் ஒரு முக்கிய பேரிடராக உள்ளது. மூன்றாவது முக்கிய காரணம் கடலில் கலக்கும் ஆறுகளின் நீர் வரத்தும் சீரற்று இருப்பதால் கடலின் தன்மை மாறுபட்டு காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையின் காரணமாக கடலில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவதும் ஒரு எச்சரிக்கை பிம்பமாக உள்ளது,. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள குடியிருப்பு வெகுவாக பாதிக்கப்படுகின்றன. சென்னை, எண்ணூர் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்ட இடங்களாகும்.  கடல் அரிப்பின் காரணமாக ஒரு வருடத்திற்கு பட்டினப்பாக்கத்தில் மட்டும் சுமார் 20 முதல் 30 வீடுகள் அடித்து செல்லப்படுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இல்லாமல் சில நாட்கள் உறவினர் வீட்டிலும், சில நாள் கடலோரத்திலும் தாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் மாணவர்கள் மற்றும் குழைந்தைகளின் நிலைமை கேள்விக்குறியாக தான் இன்றளவும் உள்ளது. அரசாங்கம் இதற்கு எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்து தராததும், பல முறை முற்றுகையிட்டும் செவி சாய்க்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் உருக்கத்துடன் கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள கடலோர கிராமங்களில் வீடுகள் இதன் காரணமாகவே கடலை விட்டு தூரத்தில் கட்டப்படுவதாகவும், ஆனால் சென்னையில் போன்ற பெருநகரங்களில் குடியிருப்பு அதிகமாக இருத்தலின் காரணமாக இவ்வித சேதாரங்கள் அதிகளவில் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான இயற்கை முரண்பாடு செயல்கள் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒரு படியாக உள்ளது. அதிலும் வரலாறு சிறப்புமிக்க இடங்களில் பட்டினப்பாக்கம் போன்ற இடங்கள் அழிவு நிலையை நோக்கி செல்வது மிகுந்த இயற்கை அழிவுகளின் ஒரு பகுதியாகும். பட்டினபாக்கத்திர்க்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணி, ராயபேட்டை, கலங்கரை பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதும் பெரு நகரங்கள் அழிவின் மறு புறமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடருமானால் சென்னை போன்ற பெருநகரங்கள் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிடுமோ? என்ற நிலை உருவாகின்றது.

- ஜீவா முருகன்

Friday, August 25, 2017

குப்பைகளை ஒதுக்கும் தூக்கிகளும், குதுகலிக்கும் வாலிபர்களும்





அண்ணா சதுக்கம், சென்னை.

    அண்ணா சதுக்கம், கடலோர காவல்படை நிலையத்திற்கு அருகில் பழைய பல வண்டிகளும், ஆயுத பீரங்கிகளும் மண்ணில் புதைந்த வண்ணம் உள்ளன. மற்றொரு புறத்தில் கூவத்திலிருந்து கடலில் கலக்கும் நீரை குப்பைகளை அகற்றும் பணியும் ஒரு புறம் நடந்து வருகிறது.

     சென்னையில் பல இடங்களிலிருந்து வீணாகி கொண்டுவரப்படும் இரும்பு வண்டிகளும், புகாரில் அடைக்கப்பட்ட வண்டிகளும் அதிகளவில் இங்கு உள்ளன. இதில் பீரங்கிகளும் அடங்கும், இதனை பார்வையிட வரும் மக்களுக்கு முறையான அணுகுமுறையோடு அனுப்பிவைக்கப்பட்டாலும், அங்கு சுகாதரமற்ற நிலையே இருந்து வருகிறது. சில பிராணிகள் இறந்து கிடந்து அதனை அப்புறபடுத்தாமல் விடுவதால், அருகில் இருக்கும் கூவம் நாற்றத்துடன் இதுவும் சேர்ந்து துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடுகிறது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க மறுபுறம் கூவம் சுத்திகரிக்கும் பணியை தீவிரமாக தினமும் செயல் படும் அரசு, அதற்கு அருகில் கடலில் குளிக்கும் இளைஞர்களை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பிற தொந்தரவுகள் இல்லாமல் குளிக்கலாம் என்று வரும் இளைஞர்கள், அது சுத்தமான நீரா? என்பதை கவனிப்பதில்லை. இப்படி தன் போக்கில் வேலை செய்யும் அரசு ஊழியர்களால் சுத்தம் செய்யும் இடமட்டுமின்றி சில நேரங்களில் மெரினா கடற்கரையின் மைய்யப்பகுதி வரை இந்த குப்பைகள் மிதந்து வருகின்றன. மெரினாவுக்கு வருபவர்களும் அதனை பெரிதும் கருதாமல் விட்டுவிடுகின்றனர்.

     
     இதன் கருத்தாக மீனவர்களிடம் கேட்டபோது “கடலில் சிறிது தூரம் சென்றதும் நீரின் தன்மையும், நிறமும் மாறி இருப்பதை பற்றி கூறினார். மேலும் கடலில் கழிவு நீரும் குப்பைகளால், வயது முதிர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாகவும் சில நேரங்களில் ஆமைகள் இறந்து மிதந்து வரும் என்பதனையும் கூறினார். இவ்வாறு வாரத்திற்கு குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து ஆமைகளை பார்பதாகவும், தூர்நாற்றம் வீசுநீரால் சிலருக்கு உடல் பாதிப்பும் ஏற்படுவதாக  கூறுகின்றனர். இதன் விளைவுகள் ஒரு கொண்டாடத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கு ஏதும் தெரியாது என்றும், கூவத்தில் இருக்கும் வரைக்கும் அது கழிவு நீராகவும், கடலில் கலந்ததும் அவை கடல் நீராகவும் தெரிவதாக நகைக்கின்றனர். இது குறித்து அரசிடம் மீனவர் சார்பிலும், மெரினாவிற்கு வரும் பொதுமக்கள் வாயிலாகவும் பல கோரிக்கைகளை வைத்தும் எப்போதும் போல் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது என்று சகிப்புத்தன்மையுடன் கூறுகின்றனர் அங்குள்ள மீனவர்கள். 

- ஜீவா முருகன்