அண்ணா சதுக்கம், கடலோர காவல்படை நிலையத்திற்கு அருகில் பழைய
பல வண்டிகளும், ஆயுத பீரங்கிகளும் மண்ணில் புதைந்த வண்ணம் உள்ளன. மற்றொரு
புறத்தில் கூவத்திலிருந்து கடலில் கலக்கும் நீரை குப்பைகளை அகற்றும் பணியும் ஒரு
புறம் நடந்து வருகிறது.
சென்னையில்
பல இடங்களிலிருந்து வீணாகி கொண்டுவரப்படும் இரும்பு வண்டிகளும், புகாரில்
அடைக்கப்பட்ட வண்டிகளும் அதிகளவில் இங்கு உள்ளன. இதில் பீரங்கிகளும் அடங்கும், இதனை
பார்வையிட வரும் மக்களுக்கு முறையான அணுகுமுறையோடு அனுப்பிவைக்கப்பட்டாலும், அங்கு
சுகாதரமற்ற நிலையே இருந்து வருகிறது. சில பிராணிகள் இறந்து கிடந்து அதனை அப்புறபடுத்தாமல்
விடுவதால், அருகில் இருக்கும் கூவம் நாற்றத்துடன் இதுவும் சேர்ந்து துர்நாற்றம்
வீசத்தொடங்கிவிடுகிறது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க மறுபுறம் கூவம்
சுத்திகரிக்கும் பணியை தீவிரமாக தினமும் செயல் படும் அரசு, அதற்கு அருகில் கடலில்
குளிக்கும் இளைஞர்களை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பிற தொந்தரவுகள் இல்லாமல்
குளிக்கலாம் என்று வரும் இளைஞர்கள், அது சுத்தமான நீரா? என்பதை கவனிப்பதில்லை.
இப்படி தன் போக்கில் வேலை செய்யும் அரசு ஊழியர்களால் சுத்தம் செய்யும்
இடமட்டுமின்றி சில நேரங்களில் மெரினா கடற்கரையின் மைய்யப்பகுதி வரை இந்த குப்பைகள்
மிதந்து வருகின்றன. மெரினாவுக்கு வருபவர்களும் அதனை பெரிதும் கருதாமல் விட்டுவிடுகின்றனர்.
இதன் கருத்தாக மீனவர்களிடம் கேட்டபோது “கடலில் சிறிது தூரம் சென்றதும் நீரின் தன்மையும், நிறமும் மாறி இருப்பதை பற்றி கூறினார். மேலும் கடலில் கழிவு நீரும் குப்பைகளால், வயது முதிர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாகவும் சில நேரங்களில் ஆமைகள் இறந்து மிதந்து வரும் என்பதனையும் கூறினார். இவ்வாறு வாரத்திற்கு குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து ஆமைகளை பார்பதாகவும், தூர்நாற்றம் வீசுநீரால் சிலருக்கு உடல் பாதிப்பும் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதன் விளைவுகள் ஒரு கொண்டாடத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கு ஏதும் தெரியாது என்றும், கூவத்தில் இருக்கும் வரைக்கும் அது கழிவு நீராகவும், கடலில் கலந்ததும் அவை கடல் நீராகவும் தெரிவதாக நகைக்கின்றனர். இது குறித்து அரசிடம் மீனவர் சார்பிலும், மெரினாவிற்கு வரும் பொதுமக்கள் வாயிலாகவும் பல கோரிக்கைகளை வைத்தும் எப்போதும் போல் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது என்று சகிப்புத்தன்மையுடன் கூறுகின்றனர் அங்குள்ள மீனவர்கள்.
- ஜீவா முருகன்
No comments:
Post a Comment