Friday, September 8, 2017

பகலில் சென்னை – இரவில் மும்பை


திருவல்லிக்கேணி, சென்னை.

மாதம் ஒருமுறை பியூட்டி பார்லரில் தன் அழகை அடைமானம் வைப்பவர்கள் முதல் தன் உடல் வலியையும், மன அழுத்தத்தையும் காரணம் காட்டி மது அருந்தும் எல்லா குடிமக்களுமே கடவுள் இல்லாமல் கார்ப்ரேட் கம்பனி (Corporate company) மூடநம்பிக்கைகளுக்கு அடிமையானவர்களாகதான் இருக்கிறார்கள். சமூக கருத்துகளால் ஆட்கொண்டு அந்நிலையை மறக்க வருவதும் இங்குதான், தனக்கென பிரச்சனைகளை மறக்க வருவதும் இங்குதான் என பார்வை தோன்றியதிற்கு உதாரணமாக இக்கால திரைபடங்கள் பலவற்றை கூறலாம். கதாநாயகன் ஒரு திரைப்படம் முழுவதும் மதுவை தேடி அலைவதும், புதுச்சேரி என்றால் மதுவிற்கு என சொல்லாடலை உண்டாக்குவதும், உடல் எடை அதிகரிக்க ஒரு மது வகை / அழகுகூட ஒரு மது வகை / சுத்திகரிக்க ஒரு மதுவகை என வசனங்களை பயன்டுத்துவதும் மற்றும் மது, புகை இல்லாமல் ஒரு திரைப்படத்தை இயக்கமுடியாது என பல விதமான கோணத்தில் மதுவை பற்றின எண்ணத்தை நாளுக்குநாள் விதைத்துகொண்டுதான் இருக்கிறது இக்கால திரைப்படங்கள்.  70-80 திரைபடங்களில் சாராயக்கடை முதல் ஒயின்ஷாப் வரை மதுஅருந்தி பெண்கள் நடனமாடுவதை பார்த்திருக்கலாம், ஆனால் இன்று நிஜவாழ்கையிலும் அதுபோன்றே இன்று பெண்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சியை போதையை காட்டி மது விற்பனை செய்வது மும்பை போன்று சென்னையிலும் வழக்கமாகி வருகிறது. 


மிழகத்தில் உள்ள மதுக்கடைகள் மதிய 12 மணியிலிருந்து இரவு 10 மணிவரை இயங்கும் என நேரம் ஒதுக்கிய போதிலும் இன்னும் பல இடங்களில் மதுப்பனக்கடைகள் நேரகாலமின்றி இயங்கி வருவதும் உண்டு. இருப்பினும் அதற்குமேலாக சென்னையின் பிரபலமான இடங்களில் உள்ள சில பார்கள் இரவு முழுக்க, பெண்களின் ஆடல் பாடலுடனும் இயங்கிவருகின்றன. அவற்றில் ஒன்றான திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலைய சாலையில் உள்ள பிரபல பாரில் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடந்து வருகிறது. இந்த பார் ஆனது பகல் 2 மணியிலிருந்து குறைந்தபட்சம் இரவு 3 மணிவரையிலும் நடைபெருவதாக கூறப்படுகிறது. இங்கு ஒரு முறை வந்து செல்வதற்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் செலாவகிறதாம், இதையும் பொருட்படுத்தாமல் இங்கு வரும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கு கொண்டுதான் இருக்கிறது.

அரசு தலையிட்டு சில பார்கள் மூடியபோதிலும் வருமானமிக்க சில பார்கள் ஓடிக்கொண்டுதான் இருகிறது. 10 மணிக்கு பிற மதுக்கடைகள் மூடியதும், மது பத்தாத நபர்கள் இங்கு தான் படையெடுக்க ஆரம்பிக்கின்றனர். கட்டுக்கடங்காத போதைக்கு உள்ளாகும் சிலர் வருவது ஒரு புறம் இருந்தாலும், மறு புறம் பெண்களின் நடனம், பாடல் போன்றவற்றை பார்க்கவேண்டும் என்று படையெடுக்கிறது. இரவு நேரம் என்பதாலும், தன்னிலை மறந்த போதையாலும் அதிகப்படியான விபத்துகள் நிகழ்வதும் வழக்கமாகி வருகிறது. இது குறித்து அப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்த காவல்துறையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது – பார்கள் சில விதிமுறைகளுடன் 11 மணிவரை மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இங்கு நடப்பதில்லை. மேலும் சென்னை கடற்கரை சாலையிலும், திருவல்லிக்கேணி பிரதான சாலை மற்றும் நடக்கும் அதிகப்படியான விபத்துகள் குடிபோதையில் நடப்பதாக கூறினார். 9 மணிமுதலே இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு 10 மணிக்கு மதுக்கடைகளை மூடச்சொல்லி, அதற்கான கூட்டங்கள் களைந்து செல்கின்றனர். இது முடிந்ததும் 11  மணியிலிருந்து பாரிலிருந்து வரத்தொடங்குகிறார்கள். அதிலும் பல நபர்கள் சிறிய சிறிய சந்துகளில் வாகனத்தில் செல்கின்றனர். மேலும் சிலர் காவல்துறைக்கு பயந்து  வாகனத்தை வேகமாக செலுத்தும் விபத்துகள் ஏற்படுவதும் உண்டு. இதனை கட்டுபடுத்தவே இரவு முழுக்க காவல்துறை ரோந்து பணியில் ஈடுபடுவதாக கூறினார்.


பாரில் மது பரிமாறுபவரிடம்(Server) கேட்டபோது “இரவு நேரங்களில் இங்கு வரும் அதிகப்படியானோர் அரசு மற்றும் ஊடகத்தை சேர்ந்தவராகத்தான் இருகின்றனர். மேலும் சில தனியார் நிறுவனங்களை சேர்ந்தவருக்கு இங்கு உயரடுக்கு உரிமம்(Elite membership) உண்டு என்றார். ஒரு நாளைக்கு இரவு வேளைகளில் மட்டும் தோராயமாக ஒரு லச்சம் வரை வருமானம் ஈட்டப்படும் என்று கூறினார். பள்ளி சீருடைகளிலும் இங்கு சிறுவர்கள் வந்து செல்வது வழக்கமாகிவிட்டது. பெண்களின் ஆடலும் பாடலும் பாரில் ஆரம்பித்து  ஐந்து மாதத்திற்கு குறைவாகத்தான் இருக்கும். இதனை அங்கு வரும் ஒரு சிலர் மட்டுமே வேண்டாம் என கூறுவதாகவும், பெரும்பாலானோர் குதுகளித்து மகிழ்வதாகவும் கூறுகின்றார். இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியின் மூலம் இங்கு வரும் நபர்களின் கூட்டம் அதிகமானதால் இவருக்கு அதிகமான டிப்ஸ்(Tips) கிடைப்பதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார்.
                இவ்வாறு நடக்கும் பார்களில் பெரும்பாலும் புகைப்படங்கள் எடுக்க அனுமதிப்பதில்லை. மனிதர்களின் இயல்பான ஆசைகளை தூண்டி, அரசியல்வாதிகளின் பின்னோக்குகளை பயன்படுத்திக்கொண்டு செயல்படும் வியாபாரக்காரர்களே இதற்கு முழுமுதற் காரணமாக இருக்கிறார்கள். தோல்போன்ற வியாபாரக்காரர்களை மறைக்க வெள்ளையாடையாய் அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் அந்த உருவமும், அந்த உருவம் இருக்கும் நாடும் போதைக்குளாகியதாக தான் இருக்கும் என்பதற்கு நல்ல சான்றாக உள்ளது இது போன்ற பார்கள்.





-    ஜீவா முருகன்

No comments:

Post a Comment