Tuesday, October 10, 2017

அழிவின் விளிம்பில் பட்டினப்பாக்கம் – கடலரிப்பு மட்டும் காரணமா?

பட்டினபாக்கம், சென்னை






கடலரிப்பு என்பது கடலுக்கு நீர்வரத்து அதிகமாதலால் அலைகள் மூலம் அதிகப்படியான மண் அரிப்பு ஏற்படுவதாகும். கடலின் அலைகளானது ஒரு வினாடிக்கு 23 முறை வந்து செல்லுமாம், இவற்றின் ஏற்ற குறையே இதன் வெளிப்பாடக உள்ளது. கடலரிப்பு உருவாவதற்கு 
மூன்று முக்கிய காரணமாக கூறப்படுவதில் ஒன்று பருவ நிலை மாற்றமும், உலக வெப்பமயமாதலின் மூலம் பனி மலைகளில் அதிக்கபடியான பனிக்கட்டி

உருகுதலின் காரணமாக கடலின் நீர் அளவும் விரிகிறது, இரண்டாவது முக்கிய காரணமாக கூறப்படுவது இயற்கைக்கு கேடாக அமைந்திருக்கும் அணு உலைகளும் ஒரு முக்கிய பேரிடராக உள்ளது. மூன்றாவது முக்கிய காரணம் கடலில் கலக்கும் ஆறுகளின் நீர் வரத்தும் சீரற்று இருப்பதால் கடலின் தன்மை மாறுபட்டு காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையின் காரணமாக கடலில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவதும் ஒரு எச்சரிக்கை பிம்பமாக உள்ளது,. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள குடியிருப்பு வெகுவாக பாதிக்கப்படுகின்றன. சென்னை, எண்ணூர் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்ட இடங்களாகும்.  கடல் அரிப்பின் காரணமாக ஒரு வருடத்திற்கு பட்டினப்பாக்கத்தில் மட்டும் சுமார் 20 முதல் 30 வீடுகள் அடித்து செல்லப்படுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இல்லாமல் சில நாட்கள் உறவினர் வீட்டிலும், சில நாள் கடலோரத்திலும் தாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் மாணவர்கள் மற்றும் குழைந்தைகளின் நிலைமை கேள்விக்குறியாக தான் இன்றளவும் உள்ளது. அரசாங்கம் இதற்கு எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்து தராததும், பல முறை முற்றுகையிட்டும் செவி சாய்க்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் உருக்கத்துடன் கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள கடலோர கிராமங்களில் வீடுகள் இதன் காரணமாகவே கடலை விட்டு தூரத்தில் கட்டப்படுவதாகவும், ஆனால் சென்னையில் போன்ற பெருநகரங்களில் குடியிருப்பு அதிகமாக இருத்தலின் காரணமாக இவ்வித சேதாரங்கள் அதிகளவில் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான இயற்கை முரண்பாடு செயல்கள் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒரு படியாக உள்ளது. அதிலும் வரலாறு சிறப்புமிக்க இடங்களில் பட்டினப்பாக்கம் போன்ற இடங்கள் அழிவு நிலையை நோக்கி செல்வது மிகுந்த இயற்கை அழிவுகளின் ஒரு பகுதியாகும். பட்டினபாக்கத்திர்க்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணி, ராயபேட்டை, கலங்கரை பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதும் பெரு நகரங்கள் அழிவின் மறு புறமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடருமானால் சென்னை போன்ற பெருநகரங்கள் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிடுமோ? என்ற நிலை உருவாகின்றது.

- ஜீவா முருகன்

No comments:

Post a Comment