7/12/2017, வியாழன்
அடையார், சென்னை.
வரை கலையில் புது விதமாக மின்னும் பிளாஸ்டிக் காகிதத்தை கொண்டு வரையப்பட்ட
மூன்று நாள் ஓவிய கண்காட்சி அடையாரில் அரங்கேறியது. அங்குள்ள ஓவியங்கள் பலவை
கடவுள் சார்ந்த படைப்பாகவே இருந்தது. அதிலும் தேவையற்று தூக்கியெறியப்படும் காகிதங்களை
கொண்டு ஓவியங்களை படைத்த சரளா சந்திரா (60) அவர்களுக்கு இந்த கண்காட்சி மிகப்பெரிய
வெற்றியாக அமைந்திருந்தது.
வட
நாட்டினை சேர்ந்தவரான இவருக்கு இது இந்தியாவில் 50வது ஓவிய கண்காட்சி ஆகும். மேலும் வேதியல் முறை
மூலம் ஏற்படும் வண்ணங்களை பற்றி முதுகலை பட்டமும் பயின்றவர்.
தங்கம் மற்றும் வெள்ளிநிற Foil பேப்பர்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தது.
இவற்றில் சில வேதியல் மாற்றம் கொண்டும் செயல் படுத்தியும் வைத்திருந்தது.
மரத்தினால் ஆனா உருவ சிலைகளுடன் சில முக்கிய கலைபொருள்களும் முக்கியமானதாக
இருந்தது. இந்த மூன்று நாள் கண்காட்சியில் இன்று பெரியவர்களின் ஓவியங்களும் நாளை சிறுவர்களின்
ஓவிய கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.
கலைகளை வெளிக்கொண்டுவரும் முனைப்போடு செயல்படும்இந்த
Forum
art gallery யானது பல விதமான வரை
கலை மற்றும் கைவினை பொருள்களை ஆதரிக்கும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருகிறது.
- ஜீவா முருகன்
No comments:
Post a Comment