Thursday, December 7, 2017

சிறு துளியில் பெரு வெள்ளமாய் இராயப்பேட்டை


    சென்னையின் பழமையான பகுதிகளில் முக்கியமான பகுதி, மைய்யபகுதி இந்த இராயப்பேட்டை. இப்பகுதியின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தோற்றத்தினை கொண்டிருக்கும். ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னையில் துண்டு பிரசுரம் முதல் பேனர் கலாச்சாரம் வரை அச்சடிப்பது என்றால் பெயர் சொல்லகூடிய இடங்களில் முக்கிய இடம் இராயப்பேட்டை என்றாலும், அனைத்து வகையான பிரியாணிகளுக்கும், அசைவ உணவிற்கும் இராயப்பேட்டை சிறந்த இடமாகும் ஆகும். அத்தகைய இராயப்பேட்டைக்கு மற்றொரு சிறப்பும் உண்டென்றால் 20வதுக்கு 20 இடத்தில் 20 வீடுகள் இருப்பதுதான். அருகருகில் தொடர்ந்து பல வீடுகளை ஐஸ்ஹவுஸ்(Ice House) பகுதியிலிருந்து பார்க்க முடியும். பெரும்பாலும் இப்பகுதியில் இஸ்லாமிய சமூகத்தினரே இருக்கின்றனர். அதனால் இஸ்லாமிய விஷேஷங்களும் வெகு விமர்சையாக இருக்கும். அந்த மாடிவீடுகள் எல்லாவற்றிலும் தவறாமல் மோட்டார்களும் இருக்கும் அதனை தொடர்ந்து காலையும் மாலையும் இயக்கவும் செய்வார்கள், ஆனால் தண்ணி தான் வரவே வராது. மோட்டரை நம்பாத சிலர் அடிகுழாவை நாடுகின்றனர்.

மாடிவீட்டுகாரர்களுக்கு மட்டும் போனஸ்? 
மற்ற காலங்களில் தண்ணீர் என்பது ஏக்கத்தினை உண்டாக்கும் இப்பகுதியில் மழை வரும்போது மட்டும் இடுப்பளவு  தண்ணீர் நிரம்ப தவறுவதில்லை. அந்த இடுப்பளவு தண்ணீரில் தான் சாக்கடையும் ஓடும் முடிந்தளவு முக்கிக்கொண்டு சில வண்டிகளும் ஓட முயற்ச்சிக்கும். மழை தண்ணிரா? இல்லை சாக்கடை தண்ணிரா?? என்று யூகிக்க முடியாத இந்த நீரானது பிரதான சாலை மட்டுமின்றி சுற்றியுள்ள அக்கம்பக்க வீடுகளையும் விட்டுவைக்காமல் உள்ளே புகுந்து ஒரு அலசு அலசி வீட்டினுள் இருக்கும் குப்பைகள் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் வரை அனைத்தையும் வெளியே சாலைவரை கொண்டுவருகிறது. மாடிவீடுகளில் இருப்பவர்கள் இந்த ஒரு அவதியிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

தண்ணீர் தேங்க காரணம்?
சென்னையின் வெளிப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கும், வீடுகளில் தண்ணீர் வருவதற்கும் காரணம் ஏறிகள் இருந்த இடம். மற்ற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு, மண் சார்ந்த பகுதிகள் இல்லாமல் இருப்பதும் வீடுகளின் எண்ணிகை அதிகரித்து இருப்பதும் ஒரு முக்கிய காரணாமாக உள்ளது. கான்கிரிட் சாலை, சிமெண்ட் சாலை போன்று போன்றவை மட்டுமே நிறைந்து காணப்படுவதும், செடி, கொடி, மரங்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். பின்பு நீர் உறிஞ்சவும், நிலத்தடி நீர் தேக்கவும் வாய்ப்பில்லாமல் போய்டுவிடுகிறது. சாலையின் இரு புறங்களிலும் உள்ள வடிகால் சாக்கடைகளை தூர்வாரி சீரமைத்தாலே போதியளவு தண்ணீர் தேங்கும் பிரச்சனை தீரும்.  

அரசின் தீர்வு?  மக்களின் தீர்வு?
     ஒவ்வொரு முறை தண்ணீர் தேங்கும் போதும் அதனை அரசு அகற்றிவிடுகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன வழி என்பதனை அறிந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அங்குள்ள மக்களும் மழை வந்தால் தண்ணீர் தேங்கும், வீட்டினுள் வரும் என்ற மனநிலைமைக்கு வந்து விட்டனர். இந்த நிலை மாறி அரசினை நம்பாமல் தானாக முன்வந்து போதுமான வடிகால் சாக்கடைகளை தூர்வாரி பனிகளை மேற்கொண்டால் இந்த துயரங்களிலிருந்து விடுபட வாய்புள்ளது.
சாக்கடைகளிலிருந்து வரும் தூர்நாற்றத்தின் மூலமே பலவிதமான நோய்களுக்கு நுழைவாயிலாக உள்ளது. தண்ணீர் தேக்கத்தினையும், சாக்கடை கழிவுகளையும் இயற்கை என்று மக்கள் அதனை விடுபட நினைத்தால் மக்கள் வாழ தகுதியான இடமாக இருக்கும்.



-    ஜீவா முருகன்








No comments:

Post a Comment