Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Tuesday, September 4, 2018

நாடகத்தில் நாட்டின் அவலங்கள்

    நாடகத்தில் நாட்டின் அவலங்கள் 
       
    அதிகார வர்கத்தை எதிர்த்து பல புரட்சிகள் தொடரும் இந்த காலத்தில். அதிகாரத்தை எதிர்த்து நாடக வடிவில் மக்களை அனுகும் கல்லூரி மாணவர்கள்.
    நம் நாட்டில் இன்றைய காலகட்டத்தில்  மக்களுக்காக அரசாங்கம் என்னும் நிலைமை மாறி பெருநிறுவனங்களுக்காக அரசாங்கம் என்னும் நிலை நடைபெறுகிறது. நாட்டு மக்களுக்கும், அரசை விமர்சிக்கும் ஊடக நிருபர்களுக்கும் நடக்கும் அவலங்களை தொகுத்து இன்றைய தலைமுறை மாணவர்கள் அறியாமையில் வாழும் பாமர மக்கள் இடையே நாடக வடிவில் கொண்டு சேர்க்கின்றனர்.

   இவர்கள் அனைவரும் வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்களாவர். இந்த நாடகங்களில் நம் சமுதாயத்தில் நடக்கும் கொடிய செயல்களை சித்தரித்து காட்டுகின்றனர். இவை மட்டுமின்றி நீட் புரட்சி, ஊடகம் நிருபர்கள் படுகொலை, அதிகார வர்கத்தின் வெறிச்செயல், பெண்களின் பாதுகாப்பு, அன்றாட வாழ்வில் மக்களின் துயரங்கள் போன்ற அனைத்தையும் நாடகம் வடிவில் இந்த மாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
 
       இந்த நாடகத்தின் இயக்குனர் பகுர்தீன் நம் நாட்டின் அவலங்களை தொகுத்து இந்த நாடகத்தை வடிவமைத்துள்ளார். உரிமைகளுக்கு குரல் கொடுத்தல் சிறை என இயங்கும் அரசினை எதிர்த்து எதற்கும் அஞ்சாத  இவர்களின் முயற்சிக்கு மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Thursday, December 7, 2017

சிறு துளியில் பெரு வெள்ளமாய் இராயப்பேட்டை


    சென்னையின் பழமையான பகுதிகளில் முக்கியமான பகுதி, மைய்யபகுதி இந்த இராயப்பேட்டை. இப்பகுதியின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தோற்றத்தினை கொண்டிருக்கும். ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னையில் துண்டு பிரசுரம் முதல் பேனர் கலாச்சாரம் வரை அச்சடிப்பது என்றால் பெயர் சொல்லகூடிய இடங்களில் முக்கிய இடம் இராயப்பேட்டை என்றாலும், அனைத்து வகையான பிரியாணிகளுக்கும், அசைவ உணவிற்கும் இராயப்பேட்டை சிறந்த இடமாகும் ஆகும். அத்தகைய இராயப்பேட்டைக்கு மற்றொரு சிறப்பும் உண்டென்றால் 20வதுக்கு 20 இடத்தில் 20 வீடுகள் இருப்பதுதான். அருகருகில் தொடர்ந்து பல வீடுகளை ஐஸ்ஹவுஸ்(Ice House) பகுதியிலிருந்து பார்க்க முடியும். பெரும்பாலும் இப்பகுதியில் இஸ்லாமிய சமூகத்தினரே இருக்கின்றனர். அதனால் இஸ்லாமிய விஷேஷங்களும் வெகு விமர்சையாக இருக்கும். அந்த மாடிவீடுகள் எல்லாவற்றிலும் தவறாமல் மோட்டார்களும் இருக்கும் அதனை தொடர்ந்து காலையும் மாலையும் இயக்கவும் செய்வார்கள், ஆனால் தண்ணி தான் வரவே வராது. மோட்டரை நம்பாத சிலர் அடிகுழாவை நாடுகின்றனர்.

மாடிவீட்டுகாரர்களுக்கு மட்டும் போனஸ்? 
மற்ற காலங்களில் தண்ணீர் என்பது ஏக்கத்தினை உண்டாக்கும் இப்பகுதியில் மழை வரும்போது மட்டும் இடுப்பளவு  தண்ணீர் நிரம்ப தவறுவதில்லை. அந்த இடுப்பளவு தண்ணீரில் தான் சாக்கடையும் ஓடும் முடிந்தளவு முக்கிக்கொண்டு சில வண்டிகளும் ஓட முயற்ச்சிக்கும். மழை தண்ணிரா? இல்லை சாக்கடை தண்ணிரா?? என்று யூகிக்க முடியாத இந்த நீரானது பிரதான சாலை மட்டுமின்றி சுற்றியுள்ள அக்கம்பக்க வீடுகளையும் விட்டுவைக்காமல் உள்ளே புகுந்து ஒரு அலசு அலசி வீட்டினுள் இருக்கும் குப்பைகள் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் வரை அனைத்தையும் வெளியே சாலைவரை கொண்டுவருகிறது. மாடிவீடுகளில் இருப்பவர்கள் இந்த ஒரு அவதியிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

தண்ணீர் தேங்க காரணம்?
சென்னையின் வெளிப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கும், வீடுகளில் தண்ணீர் வருவதற்கும் காரணம் ஏறிகள் இருந்த இடம். மற்ற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு, மண் சார்ந்த பகுதிகள் இல்லாமல் இருப்பதும் வீடுகளின் எண்ணிகை அதிகரித்து இருப்பதும் ஒரு முக்கிய காரணாமாக உள்ளது. கான்கிரிட் சாலை, சிமெண்ட் சாலை போன்று போன்றவை மட்டுமே நிறைந்து காணப்படுவதும், செடி, கொடி, மரங்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். பின்பு நீர் உறிஞ்சவும், நிலத்தடி நீர் தேக்கவும் வாய்ப்பில்லாமல் போய்டுவிடுகிறது. சாலையின் இரு புறங்களிலும் உள்ள வடிகால் சாக்கடைகளை தூர்வாரி சீரமைத்தாலே போதியளவு தண்ணீர் தேங்கும் பிரச்சனை தீரும்.  

அரசின் தீர்வு?  மக்களின் தீர்வு?
     ஒவ்வொரு முறை தண்ணீர் தேங்கும் போதும் அதனை அரசு அகற்றிவிடுகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன வழி என்பதனை அறிந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அங்குள்ள மக்களும் மழை வந்தால் தண்ணீர் தேங்கும், வீட்டினுள் வரும் என்ற மனநிலைமைக்கு வந்து விட்டனர். இந்த நிலை மாறி அரசினை நம்பாமல் தானாக முன்வந்து போதுமான வடிகால் சாக்கடைகளை தூர்வாரி பனிகளை மேற்கொண்டால் இந்த துயரங்களிலிருந்து விடுபட வாய்புள்ளது.
சாக்கடைகளிலிருந்து வரும் தூர்நாற்றத்தின் மூலமே பலவிதமான நோய்களுக்கு நுழைவாயிலாக உள்ளது. தண்ணீர் தேக்கத்தினையும், சாக்கடை கழிவுகளையும் இயற்கை என்று மக்கள் அதனை விடுபட நினைத்தால் மக்கள் வாழ தகுதியான இடமாக இருக்கும்.



-    ஜீவா முருகன்








Tuesday, October 3, 2017

பத்தகடை பாய்


இடம் : பூக்கடை, சென்னை
     உலகமாயதலையும், தொழில் நுட்பங்களிலும் மக்கள் வேறு பிம்பத்திர்க்கு சென்றாலும் இன்றளவும் முக்கிய சில பழமைகளோடு ஒன்றும் மக்கள் இருந்துகொண்டும் இருகின்றனர். ஒரே இடத்தில் நூறு வீடுகளை கட்டிக்கொள்ளும் நபருக்கு புவி ஈர்ப்பு விசையை பற்றி பேசுவது எவ்வளவு தவறு என்று புரியவைக்கிறது சென்னை பூக்கடை பகுதியில் உள்ள இந்த ஜெமினி பாய் கடை. இந்த பாய் விற்பனையை சேக் இம்மாம் அவர்கள் தெருக்களில் விற்பனை தொடங்கி, 1942 இல் சேக் இம்மாம் அவர்களால் கடையாக போடப்பட்டது. பின்பு அவரின் மகனும், இன்று அவரது பேரன் முகமது லுக்மான் அவர்களால் இக்கடை நடத்தப்பட்டு வருகிறது.

     பாய் ஆனது உடலின் தட்ப வெப்பத்திற்கு ஏற்றவாறும், புவியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறும் அதன் தன்மையை மாற்றிக்கொள்வதுதான் என கூறுகிறார் அக்கடையின் உரிமையாளர் முகமது லுக்மான். பாய்களில் படுக்கும் போது பூமிக்கும், உடலுக்கும் இடையேயான இடைவெளி குறைவாக இருப்பதனால், ஈர்ப்பு அதிகமாக செயல்படுகிறது என்றும், இதனால் உடலுக்கு அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதாக கூறினார்.  பாய்களில் பத்தகடை பாய் மிகவும் பிரசிதிபெற்றது ஆகும். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள இந்த பத்தகடை என்னும் கிராமத்தில் கிடைக்கும் கோரைப்புல்லும், அதனுள் செய்யப்படும் பாயும் அதிகப்படியான விற்பனையை உண்டாகுவதால் அப்பகுதியில் குடிசை தொழிலான கோரை பயிரிடுதல் அமோகமாக உள்ளது. காலப்போக்கில் பயிர்கள் முறை வந்ததாகவும், முன்பெல்லாம் ஆற்று கோரைபுல் மிகவும் தனித்துவம் மிக்கதாக கூறுகிறார் முகமது லுக்மான்.  கோரைபுல்லின் அளவு, அதனை நீரில் ஊறவைக்க எடுத்து கொள்ளும் காலம் அதனடிப்படையில் பாய்களில் வேறுபாடுகள் உண்டு என்கிறார். பிளாஸ்டிக் (Plastic) ஆதிக்கம் பாய்களிலும் இருக்கிறது. பிளாஸ்டிக் பாய்களின் வரத்து 1990 களிலிருந்து வரத்தொடங்கியது என்றும், மிக மலிவான விலைகளில் கிடைப்பதனால் மக்கள் விரும்புகின்றனர் என கூறினார். பிளாஸ்டிக் பாயானது அன்று 20 ரூபாயிலும், இன்று 100 ரூபாய் முதலும், கோரைப்புல் பாய்களின் விலை 1980 களில் ஜோடி 40 ரூபாய் என்றும், இன்று ஜோடி 350 ரூபாய் முதல் விற்பதாகவும் கூறுகின்றார். கோரைப்புல் பாய்யானது 800 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. சென்னையில் பாய்கள் பயன் படுத்துவோரின் எண்ணிக்கை பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறுகிறது.


பாய்களில் இருக்கும் வடிவகங்களிலும் அரசியல் பார்வை இருந்ததாகவும் கூறுகிறார். 1980 களில் கட்சிகளின் சின்னகளை பொறித்த பாய்களை அன்பளிப்பாக்குவது, தெருக்களில் தொங்கவிடுவது இது போன்ற செயலுக்கம் பாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறுகிறார் முகமது லுக்மான்.
தற்போது மெத்தைகளையும் விற்பனை செய்வதில் மும்முரம் காட்டுவதாக கூறுகிறார். இருந்தாலும் அனைத்து தரப்பினரும் பாய் வாங்குவதில் ஆர்வம் காட்டிவருவதாக் கூறுகிறார். கல்யாண பரிசாகவும், கல்யாண சடங்கு முறைகளிலும் பாய்கள் பிரத்தேகமாக தயாரித்து பிற்பனையும் செய்யப்படுகிறது. மேலும் பாய்களில் வரும் மயில், புறா, மான், பூக்கள் போன்ற வடிவங்களும், இரண்டு வகை வண்ணம், மூன்று வகை வண்ணம், பல வகை வண்ணம் பூண்ட பாய்களும் அதிகதரத்தில் காணப்பட்டது. தொழில் நுட்பத்தின் செயப்பாடு பாய்களையும் விட்டு வைக்கவில்லை. கைகளில் தயாரிக்கும் போது ஒரு நாளைக்கு அதிகப்படியாக 2 வும், இன்று தொழில் நுட்பம் மூலமாக ஒரு நாளைக்கு  10 வும் நெய்யப்படுகிறது. கைகளில் நெய்யும் பாயின் தரம், தொழில் நுட்ப இயந்திரங்களில் வருவதில்லை என கூறுகிறார் அக்கடையின் உரிமையாளர் முகமது லுக்மான்.  

 M.Jeeva
31916104