இடம் : பூக்கடை, சென்னை
உலகமாயதலையும், தொழில் நுட்பங்களிலும் மக்கள்
வேறு பிம்பத்திர்க்கு சென்றாலும் இன்றளவும் முக்கிய சில பழமைகளோடு ஒன்றும் மக்கள்
இருந்துகொண்டும் இருகின்றனர். ஒரே இடத்தில் நூறு வீடுகளை கட்டிக்கொள்ளும் நபருக்கு
புவி ஈர்ப்பு விசையை பற்றி பேசுவது எவ்வளவு தவறு என்று புரியவைக்கிறது சென்னை
பூக்கடை பகுதியில் உள்ள இந்த ஜெமினி பாய் கடை. இந்த பாய் விற்பனையை சேக் இம்மாம்
அவர்கள் தெருக்களில் விற்பனை தொடங்கி, 1942 இல் சேக் இம்மாம் அவர்களால் கடையாக
போடப்பட்டது. பின்பு அவரின் மகனும், இன்று அவரது பேரன் முகமது லுக்மான் அவர்களால்
இக்கடை நடத்தப்பட்டு வருகிறது.
பாய்களில் இருக்கும் வடிவகங்களிலும் அரசியல் பார்வை இருந்ததாகவும் கூறுகிறார். 1980 களில் கட்சிகளின் சின்னகளை பொறித்த பாய்களை அன்பளிப்பாக்குவது, தெருக்களில் தொங்கவிடுவது இது போன்ற செயலுக்கம் பாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறுகிறார் முகமது லுக்மான்.
தற்போது மெத்தைகளையும் விற்பனை செய்வதில் மும்முரம்
காட்டுவதாக கூறுகிறார். இருந்தாலும் அனைத்து தரப்பினரும் பாய் வாங்குவதில் ஆர்வம்
காட்டிவருவதாக் கூறுகிறார். கல்யாண பரிசாகவும், கல்யாண சடங்கு முறைகளிலும் பாய்கள்
பிரத்தேகமாக தயாரித்து பிற்பனையும் செய்யப்படுகிறது. மேலும் பாய்களில் வரும்
மயில், புறா, மான், பூக்கள் போன்ற வடிவங்களும், இரண்டு வகை வண்ணம், மூன்று வகை
வண்ணம், பல வகை வண்ணம் பூண்ட பாய்களும் அதிகதரத்தில் காணப்பட்டது. தொழில்
நுட்பத்தின் செயப்பாடு பாய்களையும் விட்டு வைக்கவில்லை. கைகளில் தயாரிக்கும் போது
ஒரு நாளைக்கு அதிகப்படியாக 2 வும், இன்று தொழில் நுட்பம் மூலமாக ஒரு நாளைக்கு 10 வும் நெய்யப்படுகிறது. கைகளில் நெய்யும் பாயின் தரம்,
தொழில் நுட்ப இயந்திரங்களில் வருவதில்லை என கூறுகிறார் அக்கடையின் உரிமையாளர்
முகமது லுக்மான். M.Jeeva
31916104
No comments:
Post a Comment