வரலாறு மற்றும் அதனுடான மனிதர்களின் தொடர்பை அறிவதற்கு நமக்கு சான்றாக
இருப்பது பல கற்சிற்பங்களும், தொன்மையான கோயில்களும், ஓவியங்களும்,
அரண்மனைகளுமே ஆகும்.
இவை வெறும் வரலாற்று சான்றாக மட்டுமே அல்லாமல் அவை உருவாக்கப்பட்ட காலத்தின் ஒரு மாதிரியாகவும்,
ஒரு பிரதிபலிப்பாகவுமே வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. அவற்றின் மூலம் மக்களின்
மனநிலையை புரிந்து கொள்வதற்கும், அக்காலத்தின் சமூக அமைப்பை புரிந்து கொள்வதற்கும்
இச்சிற்பங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.
ஆனால், இவை அனைத்து
காலங்களிலும் அதே தன்மையுடனும் இருக்கும் என சொல்ல முடியாது. காலங்கள் மற்றும் சுற்றுச்சூழலின்
மாற்றத்திற்கேற்ப அனைத்து வரலாற்று ஆவணங்களும் பாதிப்படையக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக
உள்ளது என்பது நாம் அறிந்ததே.
எந்த ஒரு வரலாற்று
சின்னமும் காலந்தொட்டு நிலைத்து நிற்பதற்கு ஒரே ஒரு வழி அதனை ஆவணப்படுத்துதல் மட்டுமே.
ஆவணம் என்பது அந்தந்த காலத்தின் வாழ்வியலை உணர்வதற்கும் அறிவதற்கும் உதவுகிறது. இவை
வெறும் வரலாற்று ஆசிரியர்களின் பணியாக மட்டுமே பார்க்கப் படுகிறது. ஆனால், இவை மக்களுடைய
பணி என்பதை நாம் மறந்து விட்டிருக்கிறோம் என்று கூறுகிறார் பேராசிரியர் மற்றும் வரலாற்றாசிரியர்
தொ.பரமசிவம்.
அவ்விதமான ஒரு வரலாற்று
ஆய்வை நம் இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்டு
அதனை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆவணப்படுத்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த சிற்பங்களையும்
கோயில்களையும் புகைப்படமாக மாற்றி தபால் தளத்தின் அட்டை வடிவத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு
விடப்பட்டுள்ளது. அந்த ஆய்வாளர்கள் இதனை ஒரு பெரிய அளவில் செயல்படுத்தியுள்ளனர். ஆனால்,
தபால் பயன்பாடு என்பது மிகவும் குறைந்துவிட்ட சூழலில் இந்த தபால் அட்டைகள் அனைத்தும்
வெறும் குப்பைகளாக போடப்பட்டுள்ளதாக அந்த நூலகத்தின்
பணியாளர் கூறுகிறார்.
இந்த அட்டைகளின்
சிறப்பு இவை அங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்
அச்சடிக்கப் பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது மீண்டும் விற்பனைக்காக
வைக்கப் பட்டிருக்கும் இந்த அட்டைகளின் விலை இருபது பைசா முதல் இரு ரூபாய் வரை நிர்ணயிக்கப்
பட்டுள்ளது. இந்த வாய்ப்பு வரலாற்று பொருள்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு
ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.
இவற்றை அரசாங்கம்
எந்த ஒரு பராமரிப்பும் இன்றி வைத்திருப்பது, வரலாற்று சான்றுகளை அழிக்கும் ஒரு செயலாகவே
அமையும்.
No comments:
Post a Comment