சென்னையில் பெண்கள்,
குழந்தைகள் பாதுகாப்பிற்காக ரூ.7½ கோடியில் 40 அம்மா ரோந்து வாகனங்கள், எடப்பாடி பழனிசாமி துவக்கினார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (26–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னை பெருநகர பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 40 அம்மா ரோந்து வாகனங்களின் சேவையை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா ரோந்து வாகனங்களின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்மா வாகனம்
பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு’’ திட்டத்திற்காக மத்திய அரசு புதுடெல்லி, சென்னை, மும்பை, கல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 8 நகரங்களை தெரிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் 425 கோடி ரூபாய் சென்னை பெருநகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 15 இதர காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை பெருநகரத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து மகளிர் காவல் நிலைய ரோந்து பயன்பாட்டிற்காக இந்த அம்மா ரோந்து வாகனங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு நிற வாகனம்:
இளஞ்சிவப்பு நிறம் கொண்ட அம்மா ரோந்து வாகனங்கள் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், சென்னை நகரத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தளங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடற்கரை ஆகிய இடங்களில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தனிக்கவனம் செலுத்தப்படும்.

ஜெயந்தி
உதவி காவல் ஆய்வாளர், கிண்டி

- மனிஷா சூரியமூர்த்தி
27/08/2019
No comments:
Post a Comment