திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி, ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, மற்றொன்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக சமர்ப்பிக்கப்படும் பாரம்பரியமிக்க திருக்குடைகள்.
திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடம் எல்லாம் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடி விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட்டது.
சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கப்பட்டது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, பின்னர் பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டாரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, வழியாக வந்தடைந்து காசி விஸ்வநாதர் கோவிலில் இரவு அங்கு தங்குகிறது. பின்னர்
பல்வேறு பகுதி மக்கள் திருகுடையை கண்டு தரிசனம் பெரும் வகையில் அனைத்து
பகுதிகளுக்கும் இந்த திருப்பதி குடையானது பயணம் செய்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கி
வருகின்றது.
திருப்பதிக் திருக்குடை ஊர்வலம் செல்லும் வழி எங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசித்து, ஏழுமலையான் அருளைப்பெற குடும்பத்துடன் வாருங்கள்.
No comments:
Post a Comment