Thursday, August 4, 2016

கட்டுமான தொழிலாளர்கலின் உண்ணாவிரத போராட்டம்

கட்டுமான தொழிலாளர்கலின் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு கட்டுமான பணியில் ஓய்வூ பெற்ற பல தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற முடியாமல், அரசாணை எண்.36 கடைபிடிக்காமல் விண்ணப்பதாரர்கள் அலைக்கழிக்கப்படுவதை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் ஓய்வூதியத்திற்க்காக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் 60 வயது நிறைவடைந்தாலே பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று 28 மார்ச் 11 அன்று அரசாணை எண்.36 உத்தரவிட்டுள்ளது. ஆனால் நல வாரிய அட்டையில் உள்ள வயதை அடிப்படையாக கொண்டு ஓய்வூதியம் வழங்காமல், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, வயதுகளுடன் ஒப்பிட்டு ஓய்வூதிய விண்ணப்பங்கள் நிராகரிப்படுவதாகவும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் நோக்கம் சீர்குலைக்கப்படுகிறதாகவும், வாரியத்தில் ஆயிரம் கோடி நிதியிருந்தும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் மிகவும் வறுமைக்குள்ளாவதாகவும் மற்றும் ஓய்வூதியம் பெறாமல் மரணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது என்றும் தொழிலாளர் துறையினர் தங்கள் குறைகளை முன்வைத்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நலவாரிய செயல்பாடுகள் சீர்குலைந்து விட்டன. ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சம்மந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதற்க்கு பதிலாக நலத்திட்ட உதவிகளை மறுக்கும் வகையிலேயே நலவாரிய அதிகாரிகள் செய்யப்பட்டு வருகின்றனர் ஆகையால் இந்த விஷ செயலை தடுக்கும் வகையில் தமிழக முதல்வர் தலையிட்டு இந்த பிரச்சினையில் ஓர் சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் துறையினர் வேண்டுகோள் வைத்து போராடினர்.




 

 

No comments:

Post a Comment