Saturday, August 18, 2018

ஒரு சரித்திரத்தின் கதை

             ஒரு சரித்திரத்தின் கதை
           
      இமயத்தை இழந்த தொண்டர்கள் தங்கள் தலைவனை ஒரு முறையாவது காண வேண்டும் என்று அலை கடல் போல் திரண்டு வந்து அவரின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் கடலாய் கலந்து கொண்ட தமிழக மக்கள்.
            தமிழ் நாட்டில் திராவிடத்தையும் அதான் கொள்கைகளையும் தான் இறுதி மூச்சு வரை கட்டிக் காத்த மாபெரும் தலைவர் dr. மு. கருணாநிதி. இவர் தமிழ் மொழி மேல் அளவற்ற காதல் கொண்டவர். இவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மட்டும் இன்றி இவர் ஒர் இயக்குனர், கவிஞர், தமிழ் புலமை பெற்றவர், சிறந்தக் கதை ஆசிரியர், வசன கர்த்தா இது போன்ற பல திறமைகளை தனக்குள் கொண்டவர். பல நெருக்கடிகளை கடந்து தான் உயிர் மூச்சாக கருதும் தமிழையும், தமிழ் மக்களின் முன்னேற்றத் திற்காகவும் ஆரும்பாடு பட்டவர்.  இவர் ஐந்து முறை தமிழக முதல்வராக பொறுப் பேற்றார். மக்களால் கலைஞர் என்ன அன்பாக அழைக்கப்பட்டார்.  பல முறை மரணப் பிடியில் இருந்து மீண்டு வந்த இவர். ஒரு முறையாவது மரணம் வெற்றி பெற வேண்டி தான் உயிரையே அதற்கு பரிசாக கொடுத்த நாள் ஆகஸ்ட் 7, 2018.

            இவர் இறந்த செய்தியை கேட்டு ஒரு நொடி தமிழகமே தலை சுற்றி நின்றது. அன்று இரவே பல லட்ச மக்கள் கோபாலபுரம் அருகில் குவிய தொடங்கினர். பின்னர் அதிகாலை ஒரு மணி அளவில் கலைஞரின் பூத உடல் தொண்டர்கள் மற்றும் மக்கள் பார்வைக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது. நேரம் கடக்க கடக்க மக்கள் கடலாக மாறியது மண்டபத்தை சுற்றியுள்ள பகுதி.  பின்னர் சுமார் 4-கு மணி அளவில் அவரின் கடைசி ஊர்வலம் தொங்கியது.
மக்களின் கண்ணீர் கடலில் மிதந்தபடி கலைஞரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது தங்கள் தலைவனை இந்த நிலையில் காண முடியாமல் மக்களும் கலைஞரின் மகனும் செயல் தலைவருமான ஸ்டாலின் நடந்தே சென்று தான் தந்தையின் இறுதி சடங்கை செய்தனர்.
     
   பல நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அரசு மரியாதையுடன் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் உடல் புதைக்கப்பட்டது. அவர் உடல் அளவில் நம்மை விட்டு மறைந்தாலும் மனதளவில் தமிழக மக்களின் உள்ளங்களிலும் தமிழ் மொழியின் வடிவிலும் நம்முடன் வாழ்கிறார்.

5 comments: