உணவகத்தை தேடி . . .
மனிதனின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றின் முதல் தேவையான உணவு, தமிழகத்தின் தலைமை பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தின் வகுப்புகள் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் உணவகம் செயல்படாமல் இருப்பது மாணவர்களை பெரிதும் பாதிக்கிறது.
கடந்த கல்வி ஆண்டில் வகுப்புகள் நிறைவு பெறுவதற்கு முன்னரே உணவகத்தின் ஒரு ஆண்டு குத்தகை நிறைவு பெற்றதாக கூறி மார்ச் மாத இறுதியில் வளாக உணவகம் காலி செய்து மூடப்பட்டது. கல்வி ஆண்டின் இறுதி நாட்கள் என்று மாணவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் அன்று மூடப்பட்ட வளாக உணவகம் இக்கல்வி ஆண்டு தொடங்கி இரண்டு மாதம் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உணவகம் இல்லாத காரணத்தால் அருகில் உள்ள பொது பணித்துறை சிற்றுண்டி சாலையில் உள்ள கடைகளில் வாங்கி உட்கொள்ளகின்றனர். பணம், காலம், உடல்நலம் என எல்லா தரப்பிலும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
"வளாகத்தில் உள்ள உணவகம் என்றால் ஒரு வேலைக்கு குறைந்தது ரூபாய் 15 முதல் 25க்குள் உள்ளடங்கும், ஆனால் வெளியே சென்று சாப்பிடும் போது செலவு இருமடங்காகிறது"
- தனலட்சுமி, இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவி
|
மூடப்பட்ட நிலையில் உள்ள சென்னை பல்கலைக்கழத்தின் உணவகம் |
சென்னை பல்கலைக்கழகம் தமிழகத்தின் தலைமை பல்கலைக்கழகமாக திகழ்வதால் இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடு என்று அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வி பயில ஆசைப்பட்டு பல கனவுகளுடன் வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு உணவு அருந்த வளாகத்தில் உணவகம் இல்லை என்பது வருத்ததிற்குரியரியது.
குறிப்பாக இங்கு கல்வி பயில்பவர்கள் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இது இம்மாணவர்கள் மற்றுமின்றி அவர்கள் குடும்பங்களையும் பொருளாதார வகையில் பாதிக்கிறது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் அருகில் உள்ள பொது பணித்துறையில் உள்ள சிற்றுண்டி சாலை உணவகம் சென்று உணவு அருந்தி வர நேரம் போதுமானதாக இல்லாதால் பல மாணவர்கள் வகுப்பிற்கு தாமதமாகவும் சிலர் வகுப்புகளை தவரவும் விடுகின்றனர்.
அதே போல அங்கு அனைத்து தரப்பு மக்களும் வந்து உணவு உண்பதாலும், குறிப்பாக பொது பணித்துறை ஊழியர்களும் அங்கு அதிகம் வருவதால் அவர்களுக்கே அங்கு முதல் உரிமைகளும் அனுசரிப்பும் இருக்கும். மாணவர்களோ நின்றபடி வேகமாக தங்கள் வசம் உள்ள பணத்திற்க்கேற்ப உணவை அருந்தி வளாகம் வந்தடைகின்றனர்.
ஒவ்வாமை காரணமாக சில மாணவர்களுக்கு அவ்வப்போது உடல் நிலை சரியில்லமால் போவதால் அவர்கள் தங்கள் மதிய உணவை தவிர்க்கின்றனர்.
"வீட்டில் இருந்து வரும் மாணவர்களை காட்டிலும், விடுதியில் இருந்து வருபவர்கள் நிலை தான் மிகவும் கஷ்டமானது"
- டேவிட், இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவர்
மாணவர்
இது குறித்து மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு தலைமையிடம் நாடியபோது அவர்கள் துணை வேந்தர் வந்தால் தான் உணவாகத்தின் புதிய ஒப்பந்தம் கையளித்திடப்பட்டு உணவகம் திறக்கபடும் என்று அலட்சியமாக கூறுகின்றனர்.
"துணை வேந்தர் இல்லாமால் வகுப்புகள் நடக்கின்றன, பல்கலைக்கழக விழாக்கள் நடைபெறுகின்றன, மாணவர்கள் சேர்க்கை நடக்கின்றன , இங்கு பணி செய்பவர்களுக்கு மாதம் தவறாமல் ஊதியம் செல்கின்றது. ஆனால் உணவகத்திற்கு மட்டும் துணை வேந்தர் இல்ல காரணத்தை கூறுகின்றனர்"
- அப்துல் கரீம் , ஆய்வு மாணவர்
மாணவர்கள் இதுவரை பல பிரச்சனைகளுக்கு போராட்டம் நடத்தி தங்கள் உரிமைகளை பெற்று உள்ளனர், ஆனால் உணவகம் விசயதில் அமைதியான முறையில் தான் இன்றுவரை கேட்டு வருகின்றனர் ஆனால்
சிண்டிகேட் குழுவும், தமிழக அரசும் இன்னும் செவி சாய்க்காமல் மாணவர்களை இப்படி பட்டினி போடுவதில் பல அரசியல் இருக்கின்றது.