கர்நாடகாவில் நடந்த அத்துமீறல் சம்பவத்தவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்களாக உண்ணாவிரதமிருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று தங்களுடைய உண்ணாவிரதத்தை கட்டாயத்தின் பெயரில் முடிவிற்கு கொண்டு வந்தனர்.
கர்நாடகாவில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கு எதிராகவும் நடந்து வரும் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கேட்டும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மூன்று நாட்களாக ம தி மு க அமைப்பின் தலைமை செயலகமான தாயகத்தில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர், கடைசியாக இன்று 19 செப் 16 மாலை
ம தி மு க பொதுச்செயலாளரான வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் மற்றும் இயக்குனர் கெளதம் ஆகியோர் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணா விரதத்தை முடித்து வைத்தனர், மாணவர்களின் உடல் நலன் கருதி வைகோ அவர்களின் கட்டாயத்தினாலும், அறிவுறுத்தலின் படியும் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவு பெற்றது.
இந்த போராட்டம் எந்த ஒரு கட்சியின் துணையோ அல்லது தூண்டலோ இன்றி முழுக்க முழுக்க மாணவர்கள் மட்டுமே ஒன்றிணைந்து இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இப்போராட்டத்தின் முழுமையை எந்த ஊடகமும் பரப்ப விடாமல் ஆளும் கட்சியினர் மூடி மறைக்கப்பட்டதாக மாணவர்கள் கூறினார் மற்றும் அவர்கள் போராட்டம் நடத்திய இடத்தை சுற்றிலும் பெரும் காவலர்கள் பட்டாளம் சூழ்ந்து காவலர்கள் அடிக்கடி நோட்டம் இட்டு வந்த வண்ணம் இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர், ஆனால் இவர்களுடைய போராட்டத்தை அரசாங்கம் துளி கூட பொருட்டாக எடுத்துக் கொள்ளாதது வருத்தத்தமாக இருந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி இப்போராட்டம் தாற்காலிககமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment