Wednesday, September 7, 2016

பெசன்ட்நகர் வேளாங்கண்ணி பேராலய பெருவிழா

பெசன்ட்நகர் வேளாங்கண்ணி பேராலய பெருவிழா 29 ஆகஸ்ட் மாதம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலய பெரு விழா 29 ஆகஸ்ட் மாதம் மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் திரண்டதால் பெசன்ட்நகர் மற்றும் அங்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 44-வது ஆண்டு பெருவிழாவான இவ்விழாவிற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றார்கள். இதற்காக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பாதயாத்திரையாக பலர் வந்தனர். மதியம் முதலே பக்தர்கள் கூட்டம் கூட தொடங்கியதால் பெருவிழா கோலாகலமாக களைகட்டத் தொடங்கியது.
பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கொடிமரத்தை நோக்கி ஏராளமான பக்தர்கள் முண்டியடித்து முன்னேறினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், வேளாங்கண்ணி அன்னை உருவம் பொரித்த கொடியை, ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றி, திருவிழாவைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அவரது தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கான கிறிஸ்தவர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாதா மன்றாட்டு ஆராதனை, நற்கருணை ஆசீர்வாதம் நிகழ்ச்சிகள் நடந்தன.
கொடியேற்றத்தை முன்னிட்டு பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டம் என்றும் காணாத அளவு அலைமோதியதால் பெசன்ட்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு உண்டானது, அதனால்  ஏராளமான பக்தர்கள் பேருந்து கிடைக்காமல் வீடு திரும்ப பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

கடும் நெரிசல்
வழக்கத்துக்கு மாறாக அதிக பக்தர்கள் குவிந்ததால் நேற்று மதியத்தில் இருந்தே பட்டினப்பாக் கம், அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மேலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால் மாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இரவு 10 மணிக்குப் பிறகே நெரிசல் சீரானது.












No comments:

Post a Comment